GuidePedia

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கையெழுத்துக்களை போலியாக இணைத்து ஆவணம் தயாரித்தமை குறித்து திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு விசாரணை எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 13ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திடீரென கட்சி மாறிய திஸ்ஸ அத்தநாயக்க, இவ்வாறு ஒரு போலி ஆவணத்தை ஊடகங்கள் முன் வைத்திருந்தமையும் அதனடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் முன்னால் விமல்வீரவன்சவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



 
Top