GuidePedia

(க.கிஷாந்தன்)
கடந்த  கால அமைச்சர்கள் போல் அல்லாது தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் மட்டுமல்ல அபிவிருத்தி நடவடிக்கைகளை மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் எல்லாம் ஏற்படுத்த வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளனர் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிதிச் செயலாளரும் நுவரெலிய மாவட்ட ஐ.தே.க வேட்பாளருமான திலகராஜ் தெரவித்துள்ளார்.

05.08.2015 அன்று டிக்கோயா பகுதிகளில் உள்ள தோட்டங்களில் இடம்பெற்ற 
 மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்ககையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், கருத்துத் தெரிவிக்கையில்..

இதுவரை காலமும் மலையக அரசியல் வரலாற்றில் இந்த தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு புதிய அலையை தோற்றுவித்துள்ளது.
மக்கள் அணிதிரண்டு எமக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஒட்டுமொத்த மலையக மக்களின் அரசியல் பிரதிநிதியாக செயற்பட்டு வந்துள்ளனர். இது அவர்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்தியது என்கின்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல் ரீதியாக அனைத்து மலையக மாவட்ட மக்களுக்கும் குரல் கொடுக்க முடியும். அதேநேரம் 
 நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட மாவட்ட மக்களுக்கு மட்டுமே சேவையாற்ற முடியும். எனவே நுவரெலியா  மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பணியாற்ற அமைச்சுப்பதவி தேவைப்பட்டது. அதனைப் பெற்றுக்கொண்ட அமைச்சர்களோ வாக்குகளை குறிவைத்த நுவரெலியா மாவட்ட அளவுக்கு ஏனைய பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எனவே மலையக மக்கள் சமத்துவமற்ற அபிவிருத்தியையே அடைந்து வந்தனர்.

ஆனால், மலையக மக்களுக்கு காணியுரிமையுடனான தனிவீடு எனும் உரிமைக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த போது அரசு அனுமதித்த 300 வீடுகளையும் வாக்கு நோக்கம் கருதி நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் கொண்டு வந்து சேர்க்கவில்லை.

எமது நாட்டில் எந்தெந்த பகுதியில் எல்லாம் மலையக மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற செய்தியை அரசாங்கத்திற்கு சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக பதுளை (எல்ல, விஹாரகல) கண்டி (சோகம), மாத்தளை(பிட்டகந்த), இரத்தினபரி ( தொலஸ்வல) கோகலை (அட்டால) 
 மற்றும் நுவரெலியா (மஸ்கெலியா, சாமிமலை, நோர்வூட், கொட்டகலை, ஹொலிரூட், கொன்கோடியா, டயகம, அகரப்பத்தனை)  மாவட்டத்திற்கும் என 300 வீடுகளை பகிர்ந்தளித்து  எமது வீடமைப்பின் அவசியம் எல்லா மலையக மக்களுக்கும் தேவை என்பதை நிரூபித்துள்ளார்.

இதே போன்று எதிர்வரும் காலத்தில் மொனராகல, களுத்துறை, காலி, மாத்தறை பிரதேசத்தில் வாழும் எமது மக்களுக்காக வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.

மத்திய மாகாண கல்வியமைச்சு அனுபவங்களுடன் இராஜாங்க கல்வியமைச்சு பதவியைப்பெற்ற வே.இராதாகிருஷ்ணன் மலையக அமைச்சர் ஒருவருக்கு நாடெங்கிலும் கல்வியமைச்சுப் பணியை கொண்டுசெல்ல முடியும் என நிரூபித்திருக்கிறார். மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றுக்கான அவசியம் குறித்து பலரும் உரையாடிக்கொண்டிருக்கும்போது அதன் ஆரம்ப கட்டமாக மலையகப்பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை அமைக்க கொத்மலை கொலப்பத்தன தோட்டத்தில் ஐந்து எக்கர் காணியை பெற்றுக்கொண்டுள்ளார். இது ஒட்டுமாத்த மலையக மக்களுக்குமான ஒரு அறிவுக்குறியீடாக அமையப்போவது உறுதி.

அதேநேரம் 
 அரசியல் உரிமைக்கான அனைத்து மலையக , இந்திய வம்சாவளி மக்களினதும் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக இந்த இரண்டு தலைவர்களும் ஈகோ பாராது பிரதித்தலைவர் பதவியை ஏற்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தலைமையை ஏற்று முன்மாதிரியாக திகழ்கின்றார். இந்த பரந்த மனப்பான்மையும் விட்டுக்கொடுப்பும் மலையக அரசியல் கலாசாரத்தில் புதிய போக்கைக் காட்டி நிற்கின்றது என தெரிவித்தார்.



 
Top