(பழுலுல்லாஹ் பர்ஹான்)
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு அடங்கிய பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் நூல் வெளியீட்டு விழா நாளை 12-08-2015 புதன்கிழமை மாலை 4.மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொள்ளவுள்ளதோடு நூல் அறிமுகத்தை மூத்த எழுத்தாளரும்,ஊடகவியலாளருமான சிவலிங்கம் சதீஷ்குமாரும் நூல் விமர்சனத்தை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்ரபும் சிறப்புரையை தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தெ.செந்தில்வேலவரும் நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் எனும் மேற்படி நூல் வெளியீட்டு விழாவில் பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.