GuidePedia

(எம்.எம்.ஜபீர்)
சாய்ந்தமருதில் ஜெமீல் மற்றும் சிராஸ் மீராசாஹிப் ஆகிய இரண்டு பேர்களின் தனிப்பட்ட பிரச்சினைக்காகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவும், அதிகாரம் வழங்கவில்லை என்பதற்காகவும், உள்ளுராட்சி மன்றத்தினை பெற்றுக் கொடுக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு  கட்சி மாறினர்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றுகையில்,
ஆனால் அவர்கள் இருவருடைய பிராச்சினைகள் எல்லாவற்றிற்கும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில்  கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  கல்முனையை பாரியதொரு நகரமாக அபிவிருத்தி செய்து சாய்ந்தமருதிற்கு பிரதேச சபை தருவதாக வாக்குறுதியளித்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்களுடைய ஆதரவாளர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டு வருகின்றனர். எனவே றிஸாட் பதியுத்தீன்இ அதாவுல்லாஹ் ஆகியவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தான் அரசியல் அந்தஸ்து பெற்றவர்கள் இவர்களை எல்லாம் உருவாக்கிய இந்த தாய் வீட்டு கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்;  இவர்களின் கட்சியில் மாறி இருப்பவர்கள் ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரித்து மத்தியமுகாம் 12 ஆம் கொளனி 2ஆம் வட்டார கிளைக் குழுவின் ஏற்பாட்டில் மத்தியமுகாம்-சவளக்கடை மத்திய குழுவின் துணைத் தலைவர் ஏ.எம்.மஹ்ரூப் தலைமையில்  நடைபெற்ற பிராச்சாரக் கூட்டத்தில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணில் போட்டியிடும் வேட்பாளர்கள் பைசால் காசீம், எம்.ஐ.எம்.மன்சூர். மத்தியமுகாம்-சவளக்கடை மத்திய குழுவின் தலைவர் ஏ.சீ.நஸார் ஹாஜி, மாஹிர் பவுண்டேசன் தலைவர் வை.வீ.சலீம், எஸ்.லாபீர், எம்.ஏ.ரஸாக் ஹாஜி, போரளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



 
Top