GuidePedia

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு லஞ்சம் வழங்கியமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் விவாதம் நடத்தத் தயார் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கவில்லை என்பதை மஹிந்த ராஜபக்ஷவினால் நிரூபித்து காட்ட முடியுமா? என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
தேர்தல் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் தங்களது சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வெள்ளைவான்களை பயன்படுத்திக் கொண்டதாக குறிப்பிடும் சம்பிக்க ரணவக்க, இந்த அனைத்து விடயங்களும் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
அத்துடன், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் லங்கா ஈ நியூஸ் இணையத்தின் ஊடகவிலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்றுமு; அவற்றுக்கு யார் பொறுப்பு என்பது அம்பலப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி மக்கள் இந்த அனைத்து விடயங்களுக்கும் தீர்ப்பு வழங்குவார்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.



 
Top