GuidePedia

கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் வீதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பங்கேற்ற நிகழ்வின் மீது துப்பாக்கிக் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணி பற்றி ஆராயப்பட வேண்டும்.
கறுப்பு உடையணிந்தவர்கள் இலக்கத் தகடற்ற கறுப்பு வாகனமொன்றில் வந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் வேறும் பிரதேசங்களிலும் பதிவாகக் கூடிய அபாயம் காணப்படுகின்றது.
எனவே இதற்கான பின்னணியை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ரோஹன ஹெட்டியாராச்சி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் பொலிஸாரிடம் கோரியுள்ளார்.



 
Top