GuidePedia

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ராஜபக்சர்களின் அபிவிருத்திகள் சாதாரண மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தவில்லை என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பிரச்சார நடவடிக்கைகளின் போது புளுமெண்டல் பகுதியில் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த சித்தி நசீமாவின் கணவரின் கருத்தில் நாடு பூராகவும் ராஜபக்சக்கள் செயற்படுத்திய அபிவிருத்தி திட்டங்கள் சாதாரண மக்களுக்கு நன்மை ஏற்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
சித்தி நசீமாவின் கணவர் பிரதமரை சந்தித்து வெளியிட்ட கருத்துக்களின் மூலம் இவை உறுதியாகின.
தாங்கள் வாழ்வது மற்றவர்களின் வீட்டில், அங்கும் குறைந்த அளவிலான வசதிகள் மாத்திரமே காணப்படுவதாகவும் இந்நபர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, கடந்த காலத்தினுள் கொழும்பு - சொர்க்கம் என மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்துக்கள் அப்பட்டமான பொய்கள் இதன் மூலம் அம்பலமாகியுள்ளதென பிரதி அமைச்சர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



 
Top