GuidePedia

(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
எதிர்வரும் 17ம் திகதிக்குப் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணியே ஆட்சியமைக்குமென தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும்> அமைச்சரும்> வேட்பாளருமான றிஷாட் பதியுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களை பெற்று வெற்றியீட்டுமென தெரிவித்தார்.
முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம்கள் மீதான விரோத மனப்பான்மையினால்தான் அவர் ஜனாதிபதி தேர்தலில் தோட்கடிக்;கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இன்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி செய்து வருகின்றது. முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தற்காலிகமாக தனிந்துள்ளன. இருந்தாலும் எதிர்காலத்தில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கான நிலைமையும் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சில இடங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானைச் சின்னத்திலும் அம்பாறையில் மயில் சின்னத்தில் தனித்தும் போட்டியிடுகின்றது.
அம்பாறை மாவட்டம் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் இதயம் போன்றது. இது முஸ்லிம் காங்கிரஸுக்கு தாய்வீடாகும். கடந்த முப்பது வருடமாக முஸ்லிம் கட்சி என்று சொல்லுகின்ற முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யவில்லை. முஸ்லிம்களுக்கு சரியான பாதையையோ தலைமைத்துவத்தை வழங்கவில்லை. இது ஒரு மிகவும் பரிதாபகரமான நிலையாகும்.
இந்த நாட்டில் சுமார் 23 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களில் சுமார் 13 இலட்சம் முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றன. இந்த வாக்குகளை எமது உரிமைகள் தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
முஸ்லிம்களின் இதயம்> தலைநகரம் என்று சொல்லப்படுகின்ற அம்பாறையில் மக்களின் ஆணையை இம்முறை பெறுவதற்காக நாங்கள் அங்கு தனித்துப் போட்டியிடுகின்றோம். எமது நோக்கமெல்லாம் இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் கௌரவமாக தலைநிமிர்ந்து வாழ வேண்டுமென்பதே. குறிப்பாக முஸ்லிம்களை சரியான முறையில் வழிநடாத்துவதற்கான தலைமை இன்று அவசியமாக இருக்கின்றது.
முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்தி சரியான தலைமைத்துவத்தை வழங்குவதற்கான ஆணையை எதிர்வரும் தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து வழங்க வேண்டும். எமது கட்சிக்கும் எமது கட்சி சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
முஸ்லிம்களின் பொருளாதாரம்ää கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் நாசமாக்கி முஸ்லிம்களை அடிமைப்படுத்தி வைப்பதன் மூலம் முஸ்லிம்களை நாட்டை விட்டு விரட்டுவதற்கான செயற்பாடுகள் இனவாதிகளாலும் மதவாதிகளாலும் கற்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாம் எதிர்நோக்கும் பொதுத்தேர்தல்  எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்த தேர்தலில் எமது எதிர்காலம் என்ன என்பது தெரிய வரும். முஸ்லிம்களாகி நாம் வாழ்வதா? சாவதா? என்பதை தீர்மானிக்கும் ஒன்றாகும்.
எம்மைப் பொறுத்;தவரையில் எமது நிலைப்பாடு இந்த நாட்டிலே புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான தீர்வு கிடைக்க வேண்டும். ஒரு சமூதாயம் இன்னொரு சமுதாயத்தை ஆளவோää அடிமைப்படுத்தவோ ஒருபோதும் முடியாது. எமது கட்சி இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதுமில்;லை. சகல இனத்தவர்களும் சரி சமனான உரிமைகளையும் வளங்களையும் பெறவேண்டும். இதற்காக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும்.
வடமாகாணத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அனைவரும் இன்னும் அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள்குடியேற்றப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் தமது சொந்த பிரதேசங்களில் மீள்குடியேறச் சென்றபோது இனவாதிகளும்ää மதவாதிகளும் வில்பத்து காட்டை நான் அழித்து இம்மக்களை மீள்குடியேற்றுவதாக பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். நல்நோக்குடன் சிந்திக்கும் சாதாரண சிங்கள சமூகத்தில் இவ்வாறான விடயங்களை முன்னிறுத்தி இந்த மக்களுக்காக பாடுபடும் என்னை ஒரு சிங்கள மக்களின் விரோதியாக காட்ட முனைகின்றார்கள்.
முஸ்லிம்கள் தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பிரதேசங்களிலேயே மீள்குடியேறுகின்றார்கள். அதுவும் ஒரு சிறுதொகையினரே இவ்வாறு மீள்குடியேறியுள்ளார்கள். இந்நிலையில் பிரச்சினைகளையும் அச்சத்தையும் ஏற்படுத்தி ஏனைய முஸ்லிம்களும் மீள்குடியேறாது தடுப்பதற்கான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகின்றது. முஸ்லிம்கள் வில்பத்துவில் ஒரு அங்குலத்தைக்கூட பிடிக்கவுமில்லைää அழிக்கவுமில்லை. அவர்கள் தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பிரதேசத்திலேயே குடியேறியுள்;ளார்கள். இடம்பெயர்ந்த மக்கள் தாம் வாழ்ந்த பிரதேசத்திலிருந்து ஒரு அங்குல நிலத்தைக்கூட நாம் விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை.
எம்;மில் ஒருசிலர் தங்களது சுயலாப தேவைகளுக்காக இந்த அப்பாவி முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் ஒருசில ஊடகங்களை பயன்படுத்தி பாரிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வருகின்ற இப்பொதுத்தேர்தலில் எமது மக்கள் இவ்வாறானவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
அகதியா பாடசாலை விடயத்தை பொறுத்தமட்டில் பொரும்பான்மை சமூகம் அனுபவிக்கும் சலூகைகள் முஸ்லிம்ää இந்துää கிறிஸ்தவ மக்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பான்மை இனத்தவர்களின் மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள்> உடைகள் உள்ளிட்ட சகலதும் வழங்கப்படுகின்றது. அத்துடன் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கென சம்பளமும் பெற்றுக்கொடுக்கின்றார்கள் ஆனால் ஒரு சிலவற்றையே ஏனைய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குகின்றார்கள். ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி அமைத்ததும் இவ்விடயங்களை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சகல சமூகத்தினரும் சமமான உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளேன்.
யுத்தத்தால் வடகிழக்கு பிரதேசத்திலுள்ள நகரங்கள் அழிவடைந்து கிடக்கின்றன. அவற்றை கட்டியெழுப்ப வேண்டியது இன்று அவசியமாகும். இப்பிரதேசத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்பி சுற்றுலாத்துறைக்கான சிறந்த நகரங்களாக இவற்றை கட்டியேழுப்புவதற்கு என்னாலான அனைத்தையும் செய்வேன்.
இந்த நாட்டிலே இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள் இருகின்;றன. இக்கட்சிகளில் சிறுபான்மை தலைமைகள் பங்குகொண்டு அபிவிருத்திகளையும்> வேலை வாய்ப்புக்களையுமே பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் சமூகத்தின் உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியாது. சமூகத்தின் உரிமை என்று பேசுகின்றபோது அவர்கள் கட்சி தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். எனவேதான் நாம் தனித்து கட்சியை உருவாக்கி எமது உரிமைகளை வென்றெடுப்பபதற்கான போராட்டத்தில் இறங்கியுள்ளோம். இதற்காக எமது கட்சியை பலப்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கின்றது. குறிப்பாக கடந்த காலங்களில் சுய லாபங்களை அடைவதற்காக இனவாதம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இவ்வாறான நிலைமைகளை முறியடிப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் அனைவரையும் வெற்றிபெற வைக்க வேண்டும். கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைக்கம்போது நாம் நமது உரிமைகளையும் தேவைகளையும் இலகுவாக பெற்றுக்கொள் முடியும் எனவே அனைவரும் ஒன்றியைந்து எமது வேட்பாளர்களை வெற்றிபெற வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.



 
Top