GuidePedia


நல்லாட்சி அரசாங்கத்தினுள் பெண்கள் பலவித இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.

யட்டியந்தோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பெண்களுக்கு தற்போதைய நல்லாட்சியில் பாதையில் செல்ல முடியாத நிலை இருப்பதாக குறிப்பிட்டார்.

வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற பகுதிகளில் பெண்கள் பல வன்முறைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இதுதான் நாட்டின் தற்போதைய நிலையாக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 



 
Top