(க.கிஷாந்தன்)
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுங்காயங்களுடன் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது….
கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற வேனுடன் வெலிமடை பகுதியிலிருந்து கினிகத்தேனை வரை சென்ற மோட்டர் சைக்கிள் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் செனன் வூட்லேண்ட் பகுதியில் வைத்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்து 10.08.2015 அன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டர் சைக்களின் சாரதியே இவ்வாறு படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளா ர்.
சீரற்ற காலநிலையால் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் மோட்டர் சைக்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக வழுக்கி சென்று எதிரே வந்த வேனுடன் மோதியே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.