GuidePedia

புளுமெண்டல் வீதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தொடர்பில்லை என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கோஸ்டி மோதலாகவே இதனை கருத வேண்டும்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் மஹிந்தவுக்கு தொடர்பு கிடையாது.
புளுமெண்டல் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உரிய நடவடிக்கை எடுப்பார்.
பிரதமர், சஜித் பிரேமதாச மற்றும் எனது கைகளில் எவ்வித கறையும் படிந்தததில்லை என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
மறைமுகமாக இந்த சம்பவத்துடன் ரவி கருணாநாயக்கவிற்கு தொடர்பு உண்டு என்பதனை அவர் தெரிவித்துள்ளார்.



 
Top