(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை சந்தாங்கேனியில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை தன்னிச்சைப்படி உடைத்த ஹென்றி மஹேந்திரனின் செயலை உலமா கட்சி வன்மையாககண்டித்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது,
கல்முனை சந்தான்கேனி மைதானத்துக்கு எம் எஸ் காரியப்பரின் பெயர்பொருத்தமானதாகும். கல்முனையின் தந்தை என அழைக்கப்படும் எம் எஸ்காரியப்பரின் பெயர் பலகையை உடைத்தமை தமிழ் முஸ்லிம் உறவைஉடைத்தமைக்கு சமமானதாகும். இப்பெயர் சூட்டலை சிலர் கல்முனை மாநகர மேயர்நிசாம் காரியப்பரின் குடும்ப பெயருடன் சம்பந்தப்படுத்தி அதனை விமர்சிப்பதுஅறியாமைக்கால செயற்பாடாகும்.
மேற்படி பெயர் பலகையை தன்னிஷ்டப்படி சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டுஉடைத்தமை பொது பல சேனாவின் நடவடிக்கையை நினைவூட்டுகிறது. அதே போல்எதிர் காலத்தில் கல்முனைத்தொகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாதுபோனால் முழு கல்முனை பஸாரும் இனவாதிகளால் உடைக்கப்பட்டு விடுமோ என்றஅச்சத்தை நமக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்த இடத்தில் கல்முனைத்தொகுதிக்குள் உள்ள அனைத்து ஊர் மக்களும், அம்பாரைமாவட்ட முஸ்லிம்களும் தமது பாரம்பரிய தலை நகரான கல்முனையை காக்கும்வகையில் ஒன்று பட்டு சகோதரர் ஹரீசிக்கு வாக்களிப்பது சமூக கடமை என்பதைஇந்த சம்பவம் நமக்கு காட்டுகிறது.
ஆகவே மேற்படி பெயர் பலகையை உடைத்தமை அப்பட்டமான இன வாத செயல்என்பதுடன் இதில் ஈடு பட்டோரை உலமா கட்சி வன்மையாக கண்டிக்கிறது எனமுபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.