(எஸ்.அஷ்ரப்கான்)
ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்திரமான புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் கல்முனை மாநகரம் புதிய நவீன நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். அத்துடன் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையினை நான் வழங்குவேன் என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இன்று (09) ஞாயிற்றுக்கிழமை கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்ற ஐக்கியதேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வாக்குறுதியளித்தார்.
இத்தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில்இடம்பெற்றது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம்உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்
இங்கு தொடர்ந்தும் றணில் விக்ரம சிங்ஹ உரையாற்றும்போது,
இலங்கையில் வாழும் எந்த நபருக்கும் தான் விரும்பிய சமயத்தைப் பின்பற்றக்கூடிய உரிமைஇருக்கவேண்டும் அதற்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்க முடியாது.மதஸ்தலங்கள் மீது தாக்குதல்நடத்தும் எவரையும் தராதரம் பாராது சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
இந்நாட்டு மக்களுக்கு தான் விரும்பிய மொழியைப் பேசுவதற்கு உரிமை உண்டு. ஆங்கிலத்தையும்பாவிக்க முடியும். அதேபோன்று தான் விரும்பும் கலாசாரத்தையும் பின்பற்ற முடியும். அதன் மூலம்இலங்கையர் என்ற உரித்துரிமையை நாங்கள் பாதுகாப்போம். தமிழ் முஸ்லிம்கள் முகம் கொடுத்துள்ளபிரச்சினையையும் சிங்களவர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினையையும் தீர்ப்போம்.
என்னால் 2005 ம் ஆண்டில் தன்னால் முடியாமல் போனதை 2015 ஆண்டில் செய்துகாட்டுவேன். எமதுகைகள் களங்கமில்லாதவை. எனவே எமக்கு எந்த விடயத்தையும் சிறந்த முறையில் செய்து கொடுக்கும்தைரியம் இருக்கின்றது.
இந்த கல்முனை மக்களுக்கு நாம் சென்ற காலங்களில் வந்தபோது கொடுத்த வாக்குறுதிகள்நிறைவேற்றப்படும். கல்முனையில் புதிய நகர் உருவாக்கப்படும் அத்துடன் கல்முனை அபிவிருத்திஅதிகாரசபை உருவாக்கப்படும். கல்முனையை பாரிய நகரமாக மாற்றுவோம் தேவையான காணிகளைப்பெற்றுத்தருவோம்.
இன்று நாட்டில் பசி, பட்டினி, பொருட்களின் விலையேற்றம் என்று நாடே பெரும் அவஸ்தைப்பட்டதை நாம் குருகிய காலத்தில் இல்லாமல் செய்தோம். கல்முனை சிறந்த வர்த்தக கேந்திர நிலையமாகமாற்றப்படும். அதற்காக இப்பிராந்தியங்களில் தொழில் பேட்டைகளையும் உருவாக்கி வேலைவாய்ப்புகள்வழங்கப்படும். கல்முனை நவீன சந்தை, மாநகர சபை மற்றும் பல்வேறு விடயங்கள் எங்களால்கவனத்தில் கொள்ளப்படும்.
இந்நிலையில் அச்சமற்ற செழிப்பான வாழ்ககையை நோக்கிய எமது ஐக்கிய தெசஜயக“ கட்சியின் ஆட்சிப்பயணத்தில் தமிழ் பேசும் சமூகங்கள் ஒன்றிணைந்து பங்குதாரர்களாக மாறுவோம். நல்லது செய்ய எத்தனிக்கும் எம்மீது கொண்ட நம்பிக்கையினால்தான் தமிழ் முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாதுஇன்று எல்லா மக்களும் எமது பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நம்பிக்கை வீண்போகாமல் பாதுகாப்பது எமது கடமையாகும். இதற்காக வலுவான அரசாங்கத்தை அமைக்க எதிர்வரும் ஜனவரி 17ம் திகதி ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு தமிழ் பேசும் சமூகங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்என்றும் குறிப்பிட்டார்.