GuidePedia

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டவர்கள் பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
ராஜித சேனாரட்ன, அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி. நாவீன்ன, எம்.கே.டி.எஸ். குணவர்தன மற்றும் ஹிருனிகா பிரேமசந்திர ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அண்மையில் ரத்து செய்திருந்தார்.
கட்சியின் தலைவர் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ள நபர்களின் கூட்டங்களில் கட்சியின் ஆலோசகரான தாம் பங்கேற்பது உசிதமாகாது எனக் கருதி அவர் இவ்வாறு, பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதனை தவிர்த்துக் கொள்ளவுள்ளார்.
எனினும், மாதுலுவாவே சோபித தேரரர் உள்ளிட்ட பிரஜைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்படும் பிரச்சாரக் கூட்டங்களில் சந்திரிக்கா பங்கேற்க உள்ளார்.
வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கடந்த 25ம் திகதி நாடு திரும்பிய சந்திரிக்கா, அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அர்ஜூன, ராஜித உள்ளிட்ட ஐந்து பேரின் உறுப்புரிமையை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.



 
Top