GuidePedia


மத்திய பிரதேசத்தின் ஹார்டா அருகே நீரில் மூழ்கியிருந்த ஆற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது இரண்டு ரயில்கள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டதில் 15 ரயில் பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய 300 பேரை மீட்பு படையினர் மீட்டுள்ளனர். பலர் பலியாகிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காமாயானி  எக்ஸ்பிரஸ் வாரணாசியில் இருந்து மும்பை சென்றுகொண்டிருந்த போது, போபாலில் இருந்து 160 கி.மீ.தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் ரயில் தடம் புரண்டு ஆற்றில் விழுந்துள்ளது. இந்த விபத்து நடந்த அதே இடத்தில் ஜபல்பூர்-மும்பை இடையே செல்லும் ஜனதா எக்ஸ்பிரசும் தடம் புரண்டது.

இதுவரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவித்துள்ளன. ஆனால் உயிரிழப்புகள் முழுமை விபரம் பற்றி தகவல் கிடைக்கவில்லை.

மூன்று சிறப்பு ரயில்கள் மூலம் மருத்துவர்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. கடுமையான மழையின் காரணமாக ரயில் பாலம் சேதம் அடைந்து இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.



 
Top