GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக வரவேண்டும் என ஏன் ஆசைப்படுகிறார் என்று ஜே.வீ.பி தகவல் வெளியிட்டுள்ளது.

அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது, தாஜூதீன் கொலை வழக்கின் விசாரணை நடைபெறும் போது மகிந்த ராஜபக்ச நடுங்குகிறார்.

ஏன் எனில் அந்த இலக்கு எங்கு செல்கிறது என்று அவருக்கு புரிந்திருக்கிறது.

திவிநெகும குற்றச்சாட்டில் பசில் ராஜபக்ச இருக்கிறார்.
எவன்கார்ட் பிரச்சினை மற்றும் மிக் வானுர்தி கொள்வனவு ஊழலில் கோட்டபய இருக்கிறார்.

இதனை மையமாக வைத்து கொண்டே மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த விஞ்ஞாபனத்தை வாசிக்கும் போது அதில் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் மோசடி தவிர்ப்பு காவற்துறையை தாம் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக கலைத்து விடப் போவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள போது எவ்வாறு வெற்றிலைக்கு வாக்களிக்க முடியும் என அநுர குமார திசாநாயக்க கேள்வி எழுப்பினார். 



 
Top