GuidePedia

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக அமைச்சரவையின் ஊடக பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (6) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு இடம்பெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
குடி நீரிற்கு வரி அறவிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி கூறியிருப்பது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான தீர்மானம் ஒன்றை அமைச்சரவை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
வடக்கில் சுயாதீனமாக தேர்தலில் போட்டியிடும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் தனி ஈழம் கேட்டிருந்த கோரிக்கையை நிராகரித்ததாகவும் அமைச்ர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அத்துடன் இன்று உணவுப் பொதி வழங்குவதனூடாக வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாதென்றும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதனை மக்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



 
Top