GuidePedia

நாடாளுமன்றை தூய்மைப்படுத்துவதே எமது நோக்கமாகும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2025ம் ஆண்டளவிலேனும் தூய்மையான நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்குவதே பொதுபல சேனாவின நோக்கமாகும் என அதன் தேசிய அமைப்பாளர் விதாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி போதைக்கு முற்றுப்புள்ளி,  நீதிக்கான சமூக அமைப்பு, தூய்மையான நாளை போன்ற கவர்ச்சிகரமான சொற்களை பேசி ஆட்சி அமைத்தவர்கள் ஊழல் மோசடிகள் மற்றும் நாட்டில் பீதியை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர்.
ஒரே தரப்பினர் கட்சிகளை மாற்றிக்கொண்டு அரசியல் செய்கின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



 
Top