GuidePedia

இராஜதந்திர, அரச கருமங்கள் மற்றும் சேவை ரீதியிலான பயணச் சீட்டை வைத்திருப்போர்களுக்கு வீசா பெறாமல் வெளிநாடு செல்வதற்கு இலங்கை – கசகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இரு நாட்டு மக்களிடையே போக்குவரத்தை இலகுபடுத்துவது இதன் நோக்கமாகும்.
அத்துடன், இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான நட்பு ரீதியிலான உறவு பலப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வீசா இன்றி இரு நாடுகளுக்கும் செல்லவும், அந்த நாடுகளில் 30 நாட்கள் தங்கியிருக்கவும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
அத்துடன், இந்த நாட்டுக்குச் சென்று அந்த நாட்டிலிருந்து வேறு நாடுகளுக்குச் செல்லவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



 
Top