GuidePedia

பொது தேர்தலுக்கு இன்னும்  எட்டு தினங்களே உள்ள நிலையில் ஐக்கிய தேசய முன்னணியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மஹிந்த அரசின் முக்கியஸ்தர்களாக இருந்து பின்னர் அதே மஹிந்த  அரசில் இருந்து வெளியேறி மகிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த  அமைச்சர்களான ராஜித சேனாரத்ன ,சம்பிக்க ரணவக்க ,மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் ஆகியோரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்  தினங்களுக்குள் குறித்த மூவருக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தல் நிலவுதாக புலனாய்வு துறை வழங்கிய தகவலை அடுத்து குறித்த மூவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுதந்தர கட்சியினர் மந்த கதியில்  தமது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கடைசிவாரத்தில் அதாவது நாளைய தினத்தினை தொடர்ந்து சில அரசியல் திருப்பங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 
Top