(க.கிஷாந்தன்)
வாக்கு உரிமை கிடைத்ததிலிருந்து தலைவர்களை தெரிவுசெய்வதற்கு வாக்களித்து வருகின்றோம். ஆனால் எங்களின் அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க யாரும் முன்வரவில்லையென அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்ட தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.
இத்தோட்டம் அக்கரப்பத்தனை மன்றாசி நகரத்தில் இருந்து சுமார் 08 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு 150 இற்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களுக்கு என ஒரு ஆலயம் கூட இல்லை இத்தோட்டம் அமைந்துள்ள இடத்திற்கு அண்மித்த பகுதியில் தனியார்க்கு சொந்தமான தோட்டம் காணப்படுகின்றது. இங்குள்ள முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு இம்மக்கள் சென்றனர். இரண்டு தோட்ட மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரன்பாடு காரணமாக ஆலயத்திற்கும் செல்லமுடியாமல் தவிக்கின்றனர்.
இதுவரைகாலமும் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஓன்று இல்லாமையால் இங்குள்ள குழந்தைகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்தோடு தொழிலுக்காக செல்லும் தாய்மார்கள் பிள்ளைகளை விட்டு தொழிலுக்கு செல்ல முடியாமல் பல அசௌகரியங்களை எதிர்தோக்கி வருகின்றனர்.
வெள்ளையர்கள் காலத்தில் கட்டப்பட்ட லயன் காம்பரா என்பதால் கூரை தகரம் மாற்றப்படாமல் நவீன காலத்திலும் தகரத்தின் மேல் டயர்கள் மரகட்டைகள் கற்கள் மணல் மூட்டைகளுடன் லயன்கள் காணப்படுகின்றது. குடியிருப்பு பகுதிகளில் காணப்படும் வடிக்கான்கள் உடைந்து மிகவும் மோசமான சூழலை கொண்டுள்ளது. இதுவரை காலமும் இதனை செய்துக்கொடுக்க எவறும் முன்வரவில்லையென கூறி அழுது புலம்புவதுடன் மணம் நொந்துபோய்யுள்ளனர்.
அத்தோடு மலசல கூடம் வசதிகள் மிகவும் குறைவாக காணப்படுவதால் இங்குள்ள பெண்கள் உட்பட சிறுவர்களும் பல இடர்களை சந்தித்து வருகின்றனர். இம்மக்களின் குறைப்பாடுகளை பட்டியல் இட்டுகாட்டும் அளவிற்கு அதிகமான பிரச்சனைகள் இருப்பதினை கண்டரிய முடிகின்றது.
நிலைமை தொடர்பாக இங்கு உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை எமக்கு முன்வைத்தனர்….
திரு. செல்வகுமார் தோட்ட தலைவர்
இத்தோட்டத்தில் நாங்கள் பல குறைப்பாடுகளுடன் தான் வாழ்ந்து வருகின்றோம். எங்களுடைய குறைப்பாடுகளை யாரிடம் போய்சொல்வது சிறுவர் நிலையம் ஓன்றினை கட்டி தருமாறு தோட்ட அதிகாரியிடமும் சொன்னோம் அதற்கு தீர்வு இல்லை அரசியல் வாதிகளிடம் சென்றோம் அவர்களும் தட்டிகழித்தார்கள் இதன் காரணமாக நாங்கள் தொழிலுக்கு செல்லமுடியாமல் வருமானத்தினையும் இழந்து தவிக்கின்றோம். தேர்தல் காலத்தில் மாத்திரம் பல வாக்குறிதிகளை வழங்கி சென்ற தலைவர்கள் இன்று அவர்களின் சுபபோக வாழ்க்கையை மாத்திரம் பயன்படுத்தி வருகின்றார்கள். இன்னும் சில அரசியல்வாதிகள் இப்படி ஒரு தோட்டம் இருப்பதையே மறந்துயிருப்பார்கள் நடைபெறவுள்ள தேர்தலில் அதிகமான அரசியல் வாதிகள் வந்துசெல்கின்றார்கள். முன்பு சொன்ன பல்லவியையே பாடி செல்கின்றார்கள். எனவே எங்களுடைய பிரச்சனைகளை தீர்க்க யார் முன்வருகின்றார்களோ அவர்க்குதான் ஆதரவு வழங்குவோம் என்றார்.
திருமதி. சூரியகுமாரி
சொல்லுவதற்கு மனவேதனையாக உள்ளது எங்கள் தோட்டத்துக்கு வரும் பாதை மிகவும் மோசமாக உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுகின்றது இதன் காரணமாக அதிகமான பணம் போக்குவரத்துக்காக செலவு செய்யவேண்டிய நிலைமையில் உள்ளோம். இங்குவுள்ள மக்கள் நோய்வாய்பபட்டால் உடைந்து கிடக்கும் பாதையில் தான் தோட்ட லொறியில் 10 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள மன்றாசி வைத்தியசாலைக்கு செல்லவேண்டும் நாங்கள் படும் வேதனையாருக்கு புரிய போகின்றது. சுகாதார வசதிகள் அற்றநி லையில் வாழும் நாங்கள் வாக்களித்து என்ன நடக்கபோகின்றது என அழுது புலம்புகின்றார் சூரியகுமாரி.
திரு. சுந்தரம்
தொழிற்சங்கத்துக்கு மாதாந்தம் தவறாமல் சந்தா வழங்குகின்றோம். ஆனால் எங்களுடைய பிரச்சைனைகளை தீர்த்து வைக்கப்படுவதில்லை. அத்தோடு தோட்ட நிர்வாகத்தினரிடம் பிரச்சனைகளை முன்வைத்தாலும் தீர்வு கிடைப்பதில்லை தொழிற்சங்க காரியாலயத்தில் முறையிட்டாலும் அவர்களும் அங்கத்தினர் குறைவு இதன் காரனமாக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாது என கூறுகின்றனர். எங்கள் தோட்டத்தில் வாசிகசாலை சிறுவர் நிலையம் மற்றும் ஆலயம் போன்ற பொதுவசதிகள் இல்லை. இவ்வாறான குறைப்பாடுகள் தீர்க்கப்படும் என்ற ஏக்கத்தில் இருப்பதாக இவர் தெரிவித்தார். மக்களின் குறைப்பாடுகளை தீர்க்கவேண்டியது அரசியல் வாதிகளின் பொறுப்பாகும் தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்குவதில் மாத்திரம் நின்று விடகூடாது புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.