GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக மற்றுமொரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அரச பணத்தை துஸ்பிரயோகம் செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கிரேக்க பிணை முறி கொள்வனவு மற்றும் ஊழியர் சேமலாப நிதி முறைகேடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் மூலம்; சுமார் 14 பில்லியன் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றில் நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இரண்டு குற்றச்சாட்டுக்களிலுமே முதல் பிரதிவாதியாக அஜித் நிவாட் கப்ரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இருவரையும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடுமாறு வழக்குத் தாக்கல் செய்த தரப்புச் சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையை இன்றைய விசாரணைகளின் போது முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த பாரிய நிதி மோசடிகளுக்கு இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாளர் மற்றும் நிதி அமைச்சராக கடiமாற்றிய மஹிந்த ராஜபக்ச ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இரண்டாம் பிரதிவாதியாக மஹிந்தவின் பெயர் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணியான கெலும் குமாரசிங்க என்பவரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



 
Top