இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்டத்தில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் அதிகபட்சமாக அணித்தலைவர் மேத்யூஸ் (64), சந்திமால் (59) அரைசதம் எடுத்தனர். ஹேராத் 23 ஓட்டங்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
சுழலில் அசத்திய அஸ்வின் 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது இவரது சிறந்த பந்துவீச்சாகும். மிஸ்ரா 2, ஆரோன், இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரரான ராகுல் (7) ஏமாற்றினார். ரோஹித் சர்மாவும் (9) நிலைக்கவில்லை.
பொறுமையாக விளையாடிய ஷிகர் தவான் (53) அரைசதம் கடந்தார். அணித்தலைவர் கோஹ்லி 45 ஓட்டங்கள் எடுத்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 34 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 128 ஓட்டங்கள் எடுத்து 55 ஓட்டங்கள் பின்தங்கி இருக்கிறது.