GuidePedia

(எம்.எம்.ஜபீர்)
ஒரு தனிமனிதனின் கட்சி முக்கியமா? அல்லது ஒரு நிறுவனம் முக்கியமா? மாமனிதர் அஷ்ரப் அவர்கள் மறைந்து விட்டாலும் அவரால் தோற்றிவிக்கப்பட்ட அந்த நிறுவனம் இப்போது முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் சம்மாந்துறை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையில் எந்த மூலையிலும் முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் அதனை சர்வதேச மயப்படுத்துகின்ற சக்தி இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மாத்திரமே உள்ளது.
அளுத்கமையில் பிரச்சினை ஏற்பட்ட போது ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்தபடியாக 57 நாடுகளை கொண்ட உலக நிறுவனமான உலக இஸ்லாமிய அமைப்பில் உடனடியான நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உடனுக்குடன் இங்கு நடைபெறுகின்ற பிரச்சினைகளை அங்கு தெரியப்படுத்தியதன் காரணமாக உடனடியாக அங்குள்ள ஜனாதிபதி மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடத்தில் கேள்வி கேட்டார்கள். இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களான முஸ்லிம் மக்களை உங்களால் பாதுகாக்க முடியுமா? முடியாதா? என கேட்டார்கள். அந்த சந்தர்ப்பத்தில் தனிமனிதர்களின் கட்சிகள் எல்லாம் வாய் மூடி மௌனனியாக இருந்தன.
எங்களுடைய பள்ளிவாசல்களை தாக்கிய போது இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் இராஜதந்திரிகளை ஒரு இடத்தில் அழைத்து அரசாங்கத்திற்கு தெரியாமல் எங்களுடைய கட்சி அவர்களிடத்தில் இங்கு நடைபெறுகின்ற விடயங்களை உண்மைக்கு உண்மையாக உங்களுடைய நாட்டிக்கு தெரியப்படுத்துங்கள் என்று கேட்ட போது கிட்டதட்ட 11 முஸ்லிம் நாடுகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேண்டுகேளை ஏற்று உடனடியாக எந்த பள்ளிவாசலுக்கு எந்த பிரச்சினை ஏற்படுகின்றது அந்த நாடுகளுக்கு இராஜதந்திரிகள் அனுப்பியதன் காரணமாக அந்த நாடுகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கேள்வி கேட்டார்கள் இங்கு வாழும் சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டியது உங்களுடைய கடமை அதனை நீங்கள் செய்ய தவறினால் நாங்கள் இராஜதந்திர ரீதியில் இலங்கையில் தொடர்புகளை துண்டிக்கும் நிலை உருவாகும் என அபாய எச்சரிக்கை நிலையை உருவாக்கினார்கள்.
இவ்வாறு இலங்கையில் உள்ள முஸ்லிம்களிற்கு எந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றேதோ அப்போதெல்லாம் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம்தான்.
எனவே முஸ்லிம் காங்கிஸ் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான கட்சி இப்போது திகாமடுல்ல மாவட்டத்தில் யானைச் சின்னத்திலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. எங்களுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக அல்லது வேட்பாளர்கள் மீதுள்ள வெறுப்பின் காரணமாக நாங்கள் பிரிந்து பிரிந்து ஒற்றுமையில்லாமல் வாக்களித்தால் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த மூவர் வெற்றி பெறுவர்கள். இதனால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் முஸ்லிம் காங்கிரஸின் இதயம் என்று வர்ணிக்கப்படும் அம்பாரை மாவட்டத்திலே கூடுதலான முஸ்லிம் வாக்காளரைக் கொண்ட ஊரான சம்மாந்துறை தொகுதியிலே முஸ்லிம் காங்கிரஸ் வாக்கு வீழ்ச்சி ஏற்படுவது என்றால் இலங்கையில் வேறு மூலைகளில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு ஏற்படுகின்ற வீழ்ச்சி என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அம்பாரை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களினால் தான் நாங்கள் பாதுகாக்கப்படுகின்றோம் என்று வெளி மாவட்டங்களிலுள்ள மக்கள் கூறுகின்றனர். எனவே அம்பாரை மாவட்டத்தில் இருக்கின்ற முஸ்லிம்களின் வெளிப்பாடு பாராளுமன்றத்திலே எதிர் ஒலிக்க வேண்டும் மூன்று தொகுதியில் மூன்று வேட்பாளர்களை நிறுத்திருக்கின்றார்கள். அந்த வேட்பாளர்களை மிகவும் இலகுவாக வெற்றி பெறச் செய்கின்ற ஒரு வியூகத்தினை தலைவர் வகுத்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்த தவறினால் சம்மாந்துறை பிரதிநிதியை இழக்கும் ஆனால் பாதிக்கப்படப்போவது சம்மாந்துறை மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு கேள்வி கூறியாகும். எனவே தனிமனிதனின் விருப்பு வெறுப்புக்களை மறந்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூதாயத்திற்தின் பாதுகாப்பை உறுதிசெய்வது எமது தலையாய கடமையாக இருக்கிறது.
இன்று மயில் சின்னத்தில் வருகின்றவர்களினால் எங்களுக்கு ஏதாவது பிரயோசனம் கிடைக்குமா? மயில் சின்னத்தின் கட்சியின் தலைவர் கூட வெல்லுவாரா? என்று சந்தேகத்தில் உள்ளது. அம்பாரை மாவட்டத்தில் கூட ஒரு ஆசனத்தினை பெறுவர்கள் என்பது சந்தேகமே. எங்களுடைய கட்சியின் தலைவரை மாளிகைக்காட்டில் இருந்து சாய்ந்தமருது மக்கள் வரவேற்று தோளில் சுமந்தனர். வெறும் கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஆதரவை பெற்ற கட்சிதான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த கட்சி ஆட்டம் காணுமென்றால் முஸ்லிம்களின் பாதுகாப்பில் ஆட்டம் ஏற்பட்டுள்ளது என்று தான் அர்த்தம். மறைந்த மதனிதர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழத்திலிருந்த முஸ்லிம் கலாச்சாரத்தை சீரழித்து சிங்கள கலாச்சாரத்தை தேற்றுவித்தவர் வழமையாக நடைபெறுகின்ற பட்டமளிப்பு விழாவின் போது சென்று பாருங்கள் நடப்பது புரியும். எனவும் தெரிவித்தார்.



 
Top