சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த புகையிரதத்தில் இன்று (06) இரவு 7.10 மணியளவில் சிறிய அளவிலான குண்டு ஒன்று வெடித்துள்ளது.
இதனால் ஒருவர் காயமடைந்ததுடன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
காயமடைந்தவர் புகையிரதத்தை துப்புரவு செய்பவர் என தெரிய வருகிறது.
குறிப்பிட்ட நபர் புகையிரதத்ததில் நுழைந்து துப்புரவு பணியில் ஈடுபட்ட வேளை, ஆசனத்திற்கு அடியில் ISIS என்று எழுதபட்ட பை ஒன்றை எடுக்க முயற்சித்த போது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக குறிப்பிட்ட நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் குறைந்த அளவிலான சக்தியை கொண்ட வெடிகுண்டு என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இன்று முன்னாள் ஜனாதிபதி சிலாபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்குபற்றியதுடன், அவரின் கூட்டம் முடிந்து சில மணித்தியாலங்களின் பின்னர் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.