GuidePedia

(எஸ்.அஷ்ரப்கான்)
தற்போதுள்ள அரசியல்வாதிகள் நல்ல படித்த பண்புள்ளவர்களை அரசியலுக்குள் உள்வாங்காமல் இருப்பதனால் அது ஒரு சாக்கடையாக இருக்கின்றது. அதிலிருந்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் ஒரு நல்ல அரசியல் சித்தாந்தத்தை எமது கல்முனை பிரதேசத்தில் கொண்டுவரவே நான் இன்று அரசியலில் களமிறங்கியிருக்கின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் நேரடி வேட்பாளர் சட்டத்தரணி அப்துர் ரஸாக் தெரிவித்தார்.

சாய்ந்தமருது கடற்கரை பௌஸி மைதானத்தில் இன்று (04) நடைபெற்ற  ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்தகொண்ட உரையாற்றிய சட்டத்தரணி ரஸாக் தொடர்ந்தும் தனதுரையின்போது,

எமது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி கிட்டத்தட்ட வந்து ரணில் விக்ரமசிங்ஹ பிரதமராகி சுமார் 4 மாத காலத்திற்குள் வாக்குறுதியளிக்கப்பட்ட பெரும்பாலான விடயங்கள் செய்து தரப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 13 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் உடனடியாக குறைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் மக்கள் மீது சுமத்தப்பட்டிருந்த பொருளாதார சுமை இன்று நீக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர வேண்டுமானால் மீண்டும் நாம் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த வேண்டும். களங்கமற்றவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிதான் முஸ்லிம்களுக்கு பல்வேறு இன்னல்களிலும் விமோசனம் அளித்துக் கொண்டிருக்கின்றது.
கடந்த கால மஹிந்தவின் ஆட்சியில் ஒவ்வொரு நோன்பு காலத்திலும் மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள், மார்க்கக் கடமைகளை செய்ய பயந்திருந்தார்கள். கிறீஸ் மனிதன் பிரச்சினை, பேருவளை தர்ஹா நகர் பிரச்சினை என்று பல்வேறு ரூபங்களில் பிரச்சினைகள் வந்து நிம்மதி இழந்த நிலையில் இருந்தபோது எமது முஸ்லிம் தலைமைகள் எங்கு இருந்தது. ஆனால் நாங்கள் மஹிந்தவை துரத்தியடித்த பிறகுதான் இம்முறை நோன்பை அமைதியாகவும், அச்சமின்றியும் கழித்தோம்.
றணில் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வேளையில் கல்முனைக்கு வந்தபோது நான் அவர்களிடம் ஒரு கோரிக்கை வைத்தேன். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பொழுது கல்முனையை அபிவிருத்தி செய்வதற்கு ஒரு தனியான அபிவிருத்தி அலகை உருவாக்குவேன் என அவர் கூறியிருந்தார். இதற்கு மிகவும் வழிமைத்தவர் அப்போது உயர் கல்வி பிரதி அமைச்சாராக இருந்த மையோன் முஸ்தபா அவர்கள்றணில் விக்ரம சிங்ஹவுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் இந்த வாக்குறுதி இங்கு வழங்கப்பட்டது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில்  பல்வேறு நகரங்களை அபிவிருத்தி செய்ய இருக்கின்றோம். இதில் கல்முனையை முதன்மையானதாக நாம் அபிவிருத்தி செய்வோம் என்று வாக்குறுதியளித்திருக்கின்றார்.
கல்முனை நகரம் எந்தவித அபிவிருத்தியும் இல்லாமல் ஒரு சொக மயமான நகரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் நாம் அபிவிருத்தி தாகத்தை எமது கட்சியின் ஊடாக கொண்டு வருவோம். கல்முனை சந்தையை பாருங்கள், கல்முனை பொது நுாலகத்தை பாருங்கள், பஸ்தரிப்பு நிலையத்தை பாருங்கள் எல்லாம் அபிவிருத்திக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றது. இத்தனைக்கும் அதிகாரத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முதல்வர் எல்லோரும் இருக்கின்றார்கள். ஆனால் அபிவிருத்தியில்லை. இந்த விடயங்களைத்தான் நாங்கள் கல்முனை அபிவிருத்தியின் ஊடாக செய்ய இருக்கின்றோம்.
எனவேதான் எமது கைகள் பலப்படுத்தப்பட வேண்டும். போலிகளை நம்பி எமது சமூகம் ஏமாந்தது போதும். புறப்பட்டு ஒரு மாற்றத்தை கொண்டுவர எத்தனிப்போம் அதனுாடாக எமது மண் அபிவிருத்தியை காணும் இதற்காக எமது கைகளை பலப்படுத்தமாறு வேண்டுகின்றோம். என்றார்.



 
Top