GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக அரச சார்பற்ற அமைப்பினால் வழங்கப்பட்டிருந்த வானகத்தில் ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
எனினும் அதற்கு பொறுப்பானவர்களை கைது செய்வதனை தவிர்ப்பதற்கு காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் கோரிக்கைக்கமையவே காவல்துறையினர் இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தேர்தல் நிறைவடையும் வரையில் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதனை தவிர்க்குமாறு தேர்தல் ஆணையாளர் காவல்துறையினரிடம் கேட்டு கொண்டுள்ளனர்.



 
Top