(க.கிஷாந்தன்)
வேன் ஒன்றில் இருந்து நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பபில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களின் 1000ற்கும் மேற்பட்ட போஸ்டர்கள் மற்றும் ஸ்டிகர்கள் என மீட்கப்பட்டுள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொட்டகலையிலிருந்து நோர்வூட் நோக்கி சென்ற போது அட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் வைத்து 01.08.2015 அன்று காலை 11.00 மணியளவில் குறித்த வேனை பரிசோதனை செய்யும் போது இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டு சென்ற போஸ்டர்களையும், ஸ்டிகர்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்த சந்தேக நபர்களை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் கைப்பற்றிய போஸ்டர்களை புகைப்படம் எடுக்க அட்டன் பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.