GuidePedia

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பொதுச் செயலாளர்கள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி பொய் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெறவுள்ள வெற்றியை தடுக்க சிலரின் அழுத்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இதுவென சுசில் பிரேமஜயந்த அத தெரணவிடம் தெரிவித்தார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி யாப்பின்படி கட்சி பதவியில் இருந்து யாரையேனும் நீக்க வேண்டுமாயின் மத்திய செயற்குழுவின் அனுமதி பெற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
மத்திய செயற்குழுவிற்கு எதிராக நீதிமன்றில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டார். 
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் யாரையேனும் பதவி நீக்கம் செய்வதாயின் யாப்பிற்கு அமைய நிறைவேற்று சபையின் அனுமதியில் அதனை செய்ய வேண்டும் எனவும் நிறைவேற்று சபையை செயலாளர் என்ற அடிப்படையில் தானே கூட்ட வேண்டும் என்றும் ஆனால் தான் அப்படி எதனையும் செய்யவில்லை என்றும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.



 
Top