GuidePedia

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரவி கருணாநாயக்க கொழும்பில் வன்முறைகளை கட்டவிழ்த்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் உறுதியளித்திருந்தார்.
கொழும்பு நகரில் ரவி கருணாநாயக்க வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றார்.
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இல்லாமல் செய்திருந்தது.
ரவி கருணாநாயக்க பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களை பேரணியாக அழைத்துச் சென்று தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுசரணையுடன் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 21 பேரை விடுதலை செய்யுமாறு ரவி கருணாநாயக்க பொலிஸார் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.



 
Top