GuidePedia

(எஸ்.அஷ்ரப்கான்)
முஸ்லிம் லிபரல் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் பற்றிய விசேட கலந்துரையாடலும் எதிர்வரும் 07.08.2015 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டலில் நடைபெறும் என கட்சியின் தேசியத் தலைவர் எம். இஸ்மாலெப்பை தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை முஸ்லிம்கள் இன்று இரண்டு பாரிய  சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளனர். தேர்தல் திருத்தச் சட்டமூலம், சர்வதேச அழுத்தங்களின் அடிப்படையில் சிறுபான்மைகளுக்கான தீர்வு என்ற இரு விடயங்களும் மிகவும் விரைவாக ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. இந்நிலையில் முஸ்லிம்களின் வகிபாகம் என்ன என்ற கேள்விக்கு எமது முஸ்லிம் தலைமைகளின் விடைகாண முடியா துரதிஸ்ட நிலை காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலை மாற்றப்பட வேண்டிய நிலையில் எமது தேர்தல் விஞ்ஞாபனமும், கலந்துரையாடலும் மிகவும் பொருத்தமான தீர்வினை நோக்கிய பயணமாக அமையும் என எதிர்பார்க்கின்றேன். எனவே இந்த தீர்வுத் திட்டத்தை அமுல்படுத்தும் நோக்குடன் அதற்கான மேலான அபிப்பிராயங்களுடன் எமது மக்களை மக்கள சந்திப்புக்களை நாம் மேற்கொள்ள உள்ளோம் எனவும் முஸ்லிம் லிபரல் கட்சியின் தேசியத் தலைவர் எம். இஸ்மாலெப்பை தெரிவித்தார்.



 
Top