உயர்தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்குள் கையடக்கத்
தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும் என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள் ஏதேனும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டால் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யலாம் எனவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் கூறுகின்றார்