இலவச விண்டோஸ்-10 அப்டேட் என்று வரும் இ-மெயில்களில் மால்வேர் எனப்படும் கம்ப்யூட்டர்களை நாசமாக்கும் வைரஸ்கள் அனுப்பபடுவதால் அப்படிப்பட்ட இ-மெயில்களை நம்பவேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் உலகின் புதிய வரவான மைக்ரோசாப்டின் விண்டோஸ்-10 பதிப்பு நேற்று முன்தினம் வெளியானது. பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்ட இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது.
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ்-10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நெட்வொர்க் உபகரணங்களை உற்பத்தி செய்யும் சிஸ்கோ என்ற அமெரிக்க நிறுவனம் இலவச விண்டோஸ்-10 அப்டேட் என்று வரும் இ-மெயில்களை நம்பவேண்டாம், அவை போலியானவை, மேலும் அவற்றை தரவிறக்கம் செய்யும் போது விண்டோஸ்-10 அப்டேட்க்கு பதிலாக மால்வேர் எனப்படும் கம்பூட்டர்களை நாசமாக்கும் வைரஸ்கள் இன்ஸ்டால் ஆவதாக எச்சரித்துள்ளது.