(க.கிஷாந்தன்)
லிந்துலை பொலிஸ் பிரிவுகுட்பட்ட நோனா தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையில் 09.08.2015 அன்று தலவாக்கலை நகரத்தில் சென்ற தனியார் பேரூந்து லிந்துலை தபாலகத்தின் ஊழியர் ஒருவர் மீது மோதியதால் ஊழியர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு சம்பந்தப்பட்ட ஊழியர் 09.08.2015 அன்று வாக்காளர் அட்டை வழங்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த வேளையிளேயே இவர் பாதையில் நடந்து செல்லும் போது பேரூந்தினால் மோதி தேயிலை செடியில் விழுந்துள்ளார்.
சாரதி இதனை பாராமல் சென்றபோது விழுந்தவர் எழுந்து சத்தமிட்டுள்ளார் அதன் பின்னரே சாரதியால் பஸ் நிறுத்தப்பட்டதாக ஊழியர் தெரிவித்தார்.
இதன் போது ஊழியர் சாரதியிடம் கேட்டபோது சாரதியால் சம்பந்தப்பட்ட ஊழியரை தகாத முறையில் பேசியதாகவும் இதனை போய் பொலிஸில் சொல்லுமாறு கூரியதாகவும் இதன் காரணமாக 09.08.2015 அன்றைய தினம் வழங்க வேண்டிய 846 வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க முடியாமல் போய்யுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக சம்பந்தப்பட்ட சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சாரதியியை 10.08.2015 அன்று நுவரெலியா நீதிமனறத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.