2011ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட்ட நான்குபேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தாம் குற்றவாளிகள் அல்லர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட்ட 13பேரும் தெரிவித்துள்ளனர்
இன்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குறித்த 13பேர் மீதும் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
சட்டவிரோதமாக கூடியமை, கொலை மற்றும் கொலைக்கு திட்டமிட்டமை உட்பட்ட 17 குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை ரயல் அட்பார் நீதிபதிகள் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதிக்கு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்தநிலையில் குற்றச்சாட்டுக்கள் வாசிக்கப்பட்டபோது குற்றம் சுமத்தப்பட்ட துமிந்த சில்வா உள்ளிட்டோர் தாம் குற்றவாளிகள் அல்லர் என்று தெரிவித்தனர்.