GuidePedia

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனுராதபுர மாவட்ட வேட்பாளர் குழுத் தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளருமான கைத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் வீட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி போயா தினமான நேற்று அனுராதபுரத்திலுள்ள விகாரைகளில் சமயக் கிரியைகள் பலவற்றில் கலந்து கொள்வதற்காக வேண்டி அங்கு சென்றிருந்தார்.
இதன்போதே திடீரென இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அமைச்சர் துமிந்தவின் வீட்டில் கூடியிருந்த மக்களுடன் சிறிதுநேரம் கலந்துரையாடிவிட்டு ஜனாதிபதி அங்கிருந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



 
Top