GuidePedia


ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை கலைத்து விட்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி விரைவில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கலைக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 

இரண்டு வாரங்களுக்குள் இந்த நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 10 வருடங்களாக சேவையாற்றிய அதே பாதுகாப்பு பிரிவினரையே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதும் தொடர்ந்து வந்தார். 

இதேவேளை றக்பி வீரர் வசீம் தாஜூடினின் மரணத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த மூவருக்கு தொடர்பிருப்பதாக அண்மையில், ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



 
Top