GuidePedia

(ஏ.எஸ்.எம். இர்ஷாத்)
பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு வாழ் மக்கள் அதிகப்படியான வாக்குகளை வழங்கி என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பெரோஸா முஸம்மில் நம்பிக்கைத் தெரிவித்தார்.
வெல்லம்பிட்டி வென்னவத்தை, கிருலப்பனை ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பு மாவட்டம் எந்த அபிவிருத்தியையும் காணவில்லை. குறிப்பாக மத்திய கொழும்பு பிரதேசத்தில் வாழ்ந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடங்களுக்கு மாற்றி அம்மக்களின் சொந்த வீடுகளை சூறையாடினார்கள். 
இந்த நிலங்களை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்து அதன் மூலம் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்களே அன்றி கொழும்பு வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கான எந்தவொரு ஆக்கப10ர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கொழும்பு மாநகரசபையினால் கொழும்பு நகரம் அழகுபடுத்தப்பட்டதே அன்றி மஹிந்த ராஜபக்ஷவினால் அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். ஏனெனில் கொழும்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை தாமே முன்னெடுத்ததாக பிரசாரம் செய்யதார்கள்.
நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட உடன் கொழும்பில் உள்ள மக்களுக்கு தனியான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். குடிசை வீடுகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் தொழில்வாய்ப்பை பெறுவதற்கான வளங்களை பெற்றுக்  கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




 
Top