GuidePedia

(எஸ்.அஷ்ரப்கான்)
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ததன் மூலம் நாட்டு மக்கள் பெற்றுக் கொண்ட வெற்றியை மீண்டும் உறுதிப்படுத்த 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அனைத்து இன மக்களும் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று ஐ.தே.முன்னணியின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் அபேட்சகரும் கிழக்கு மாகாண சபையின் தவிசாளருமான கலப்பதி கல்முனையில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நான் 1989ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகின்றேன்.எப்போதும் ஐ.தே.கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டுள்ளேன். திகாமடுல்ல மாவட்டத்திலிருக்கும் சிங்கள மக்களுக்கு மட்டும் நான் சொந்தமானவனல்ல.தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் நான் சொந்தக்காறன். என்னிடம் அரசியல் ரீதியில் உதவி கேட்டு வந்த எவரையும் நான் கைவிட்டதில்லை. என்னால் முடியுமான அனைத்து உதவிகளையும் செய்துள்ளேன். எதிர்காலத்திலும் முஸ்லிம், தமிழ் மக்களுக்கு என்னாலான சேவைகளைச் செய்யவுள்ளேன்.

நடைபெறப்போகும் பொதுத் தேர்தலின் மூலம் பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மகத்தான வெற்றியை ஈட்டவுள்ளது. நாமே ஆளும் தரப்பாக மாறப் போகின்றோம்.எமது கட்சி மக்கள் விரும்பும் காலம் வரை இந்த நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும். ஆகவே இத்தேர்தலில் எனது விருப்பு இலக்கம்- 01 க்கு வாக்களித்து என்னையும் வெற்றி பெறச் செய்யுமாறு உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.



 
Top