GuidePedia

சிங்கள பௌத்தத்தை பாதுகாத்தல் தொடர்பில் பகிரங்க விவாதமொன்றை நடத்தத் தயாரா? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு பொதுபல சேனா அமைப்பு சவால் விடுத்துள்ளது.
சிங்கள பௌத்தத்தை பாதுகாப்பது தொடர்பிலான விவாதத்தில் மஹிந்தவுடன், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் தினேஸ் குணவர்தன போன்றவர்கள் இணைந்து கொள்ள முடியும் என பொதுபல சேனாவின் தலைவர் டிலான்த விதானகே தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்களின் வாக்குகள் மஹிந்தவிற்கு கிடைக்காமல் போனதற்கு தமது அமைப்பே காரணம் என மஹிந்த வெறுமனே குற்றம் சுமத்தி வருகின்றார்.
இந்தக் குற்றச்சாட்டு வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு பிரதமர் பதவி வழங்காவிட்டால் புதிய அரசாங்கத்தில் தாம் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்வதில்லை என முடிந்தால் விமல் வீரவன்ச பகிரங்கமாக அறிவிக்கட்டும் என டிலான்த விதானகே சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று அவ்வமைப்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பிலெயே இந்த சவாலை விடுத்துள்ளார்.



 
Top