GuidePedia

பொதுத் தேர்தலின் நிமித்தம் முன்னெடுக்கப்படும் பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன்  நிறைவு செய்யப்பட வேண்டும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய குறித்த காலப்பகுதிக்கு பின்னர் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் தேர்தல்
பிரசாரம் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.
மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தபால் மூலம் வாக்களிக்க தவறிய உயர்தர பரீட்சை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள
கல்வி சார் ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு நாளை விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டுள்ளார் .





 
Top