(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அண்மையில் புதிய கால்நடை வைத்திய அதிகாரியாக டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திரா நியமிக்கப்பட்டு கடமையாற்றி வருகின்றார்.
இலங்கை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளரின் கீழ் இக் காரியாலயம் இயங்கி வருகின்றது.
பொது மக்கள் உரிய நேரத்தில் பொருத்தமான கால்நடை வைத்திய சேவையை பெற்றுக்கொள்ளுமாறு காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திரா தெரிவித்துள்ளார்.
மேற்படி புதிய கால்நடை வைத்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் திருமதி.லிங்கேஸ்வரன் டுஜித்திரா கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் பீ.வீ.எஸ்.சீ. பட்டதாரியான இவர் காத்தான்குடி ஊர் வீதி புணருத்தான பணிக்கான வீதி அபிவிருத்தி அதிகார சபையின் களப் பொறியியலாளர் ஏ.லிங்கேஸ்வரனின் மனைவியும்,மட்டக்களப்பு புகையிரத நிலைய சிரேஷ்ட புகையிரத நிலைய அதிபர் ஏ.வசந்த குமார் தம்பதியரின் புதல்வியுமாவார்.