GuidePedia

(க.கிஷாந்தன்)

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசுமலை விகாரைக்கு சொந்தமான காணியை தனிநபர் ஒருவர் 11.08.2015 அன்று காலை 10 மணியளவில் துப்பரவு செய்து ஆக்கிரமிக்க முயற்சி செய்துள்ளார்.

இக்காணி பன்சலைக்கு சொந்தமானதால் இக்காணியை விகாரைக்கே வழங்குமாறு இப்பகுதி மக்கள்  ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அத்தோடு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இக்காணியின் பரப்பளவு 400 பேர்ச் ஆகும். பல வருடமாக இக்காணியினை விகாரை நிர்வாகமே பராமரித்து  வந்துள்ளது.

இந்த நிலையிலேயே தனிநபர் ஒருவர் இதற்கு பொய்யான ஆதாரங்களை தயாரித்துள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

விகாரை காணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீட்டு தர  நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுதொடர்பான விசாரணையை அக்கப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




 
Top