GuidePedia

க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பொறியியல் தொழில்நுட்ப  பாடத்துக்கான வினாத் தாள், நடைபெற முன்னர் மாணவர் ஒருவரின் முகநுால் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்கள் குழுவொன்று இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்துக்கும், ஜனாதிபதி செயலகத்துக்கும் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த வினாத்தாள் நேற்று சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு  நடைபெறும்  பரீட்சையில் வழங்கப்படவிருந்தது. இந்த வினாத் தாளின் ஒரு பகுதி முந்தின தினமான வெள்ளிக்கிழமை (7) மாலை “பேஸ் புக்” பகுதியில் வெளியாகியுள்ளது.
இந்த முகநுால் பகுதியில் வெளியாகியிருந்த பரீட்சை வினாத்தாளும் பரீட்சையில் வழங்கப்பட்ட வினாத்தாளும் ஒரே மாதிரியாக அமைந்திருந்ததாக மாணவர்கள் முறைப்பட்டுள்ளனர்.
இதனால், தமக்கு அநீதமிழைக்கப்பட்டுள்ளதாகவும், நீதியைப் பெற்றுத்தருமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாணவர்கள் கேட்டுள்ளனர்.



 
Top