GuidePedia

தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தில், மோசடிகாரர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்காமல் இருப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளனர்.
தீவிர ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள, பாதாள குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ள எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அமைச்சுப் பதவி இல்லையென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மற்றும் பாதாள குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் நீண்ட நேர பேச்சுவார்த்தைகளை நடாத்திய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.
தீவிர ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள, பாதாள குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ள எந்தவொரு அரசியல்வாதிக்கும் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகள் வழங்கப்படாதென மத அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுக்கு இரண்டு கட்சி தலைவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதற்கமைய ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் பாதாள குழுக்களுடன் தொடர்பு வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவுகளில் அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



 
Top