GuidePedia

(க.கிஷாந்தன்)

முன்னால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதி மைத்திரபால சிரிசேனவுடனா அல்லது முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடான இருக்கின்றார் என்பதினை மக்களுக்கு தெளிவிப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியுடன் யார் வேண்டுமானாலும் தேனீர் அருந்தலாம் அதற்கு தடை இல்லை தேனீர் அருந்துபவர்கள் சொல்வதெல்லாம் உண்மையாகாது எனவும் சம்பள பேச்சுவார்த்தை தொடர்பாக ஒரு சிலர் கூறுகின்ற கருத்துகளை பெருந்தோட்ட மக்கள் கணக்கெடுக்க வேணடிய தேவையில்லை. எனவும் பிரதமர ரணில் தெரிவித்துள்ளார்.

(02.08.2015) அன்று தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இவர் மேலும் தெரிவிக்கையில்…

தேர்தலின் பின்பு பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்ததை நடத்த இவர்களுக்கான சாதாரண சம்பளம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
இந்த பேச்சுவார்த்தையில் தோட்ட கம்பனிகளுடன் எம்முடன் இணைந்து இருக்கும் தொழிற்சங்கங்களையும் மலையகத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்ளையும் ஒன்றினைத்து இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும்.

மலையகத்தை பொருத்த வரையில் நுவரெலியாவை ஒரு உல்லாச மையமாக மாற்றுவதற்கும் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு ஏற்படுத்துவதற்கும், பண்ணை தொழிலாளர்களுக்கு புதிய தொழில்வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கம் எந்தெந்த காலத்தில் எல்லாம் ஆட்சி செய்ததோ அந்த காலத்தில எல்லாம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அவர்களுடைய நலன் சார்ந்த விடயங்ளையும் கருத்தில் கொண்டு செயல்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் மலையக மக்கள் ஜக்கிய தேசிய கட்சியையும் அதனுடைய வேட்பாளர்களையும் வெற்றியடைய செய்வதற்கு அனைத்து வழிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.



 
Top