(க.கிஷாந்தன்)
நடைபெறவிருக்கு பொது தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டுயிருக்கின்றது.
அதன் முதல் கட்டமாக 02.18.2015 அன்று நோர்வூட், அட்டன், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை, பதுளை ஆகிய பகுதிகளில் விநியோகிக்கப்பட்டது.
தபால் ஊழியர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களிடம் விநியோகித்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையாளரினால் வாக்களர் அட்டைகளை தபால் நிலையத்தின் மூலம் விநியோகிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.