புத்தளம் மாவட்டத்தில் எட்டு பாராளுமன்ற ஆசனங்களில் 4 ஆசனங்களை பொது ஜன ஐக்கிய முன்னணியும் 3 ஆசனங்களை ஐக்கிய தேசிய கட்சியும் மிகுதி ஒன்று புத்தளம் நகர பிதா பாயிஸ் போட்டியிடும் சுயேட்சை குழு (ஒட்டக கூட்டணி) வெற்றி கொள்ளும் என ரிவிர பத்திரிகை புலனாய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த ஒட்டக சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை அணியானது முஸ்லிம் மக்கள் தொகையில் ஏனைய தரப்பினரையும் பிரதிநிதித்துவம் செய்வதாக குறித்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
ஒருவேளை சுயேட்சை குழு குறித்த ஆசனத்தை இழக்குமானால்…
1. அக்குழுவிற்கு வழங்கப்படாத வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து இருப்பினும்; மாவட்டத்தில் ஐ.தே.க வுக்கு ஆசனங்களில் அதிகரிப்பு ஏற்படாது அதே 3 ஆசனங்களை தான் பெறும் என்றும் கூறப்படுகிறது.
2. புத்தளம் மாவட்டத்தில் வெற்றி பெறப் போகும் பொது ஜன ஐக்கிய முன்னணி மேலுமோர் ஆசனத்தை பெற்று மொத்தமாக 5 ஆசனங்களை பெறும் என்றும் எதிர்வு கூறப்படுகிறது.
புத்தளம் மாவட்டத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணி நான்கு ஆசனங்களை வெல்லும் பட்சத்தில் அது களமிறக்கியுள்ள வேட்பாளர்களில் பிரியங்கர ஜயரத்ன, சனத் நிஷாந்த, தயாஷித திசேரா அருந்திக பிரனாந்து ஆகியோர் முன்னணி வகிப்பதாக அறிய முடிகிறது.
இதே நேரம் ஐக்கிய தேசிய கட்சியில் பாலித ரங்கே பண்டார மற்றும் அசோகா வடிகமங்கா ஆகியோர் மத்தியிலே போட்டி நிலவுவதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.