GuidePedia

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கூடுதலான ஆதரவு கிடைக்கும் என பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் மாற்றுக்கொள்கை நிலையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இம்மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்காளர்களின் உணர்வு மற்றும் அவர்களின் மனப்பாங்கு தொடர்பில் முக்கிய கேள்விகளை கொண்டு நாடளாவிய ரீதியில் மாற்றுக்கொள்கை நிலையத்தினால் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவில் இலங்கையின் அடுத்த பிரதமராகுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு 39.8 வீதம் ஆதரவு இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 27.5 வீதம் ஆதரவு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
4 வீதமானோர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறாது எனவும் 66.9 வீதமானோர் நீதியான தேர்தல் நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பிரதமராவதற்கு யார் மிகவும் பொறுத்தமானவர்? என்ற கேள்விக்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் மக்கள் 62.3 வீதமும், மலையக தமிழ் மக்கள் 71.2 வீதமும், முஸ்லிம் மக்கள் 62.3 வீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சமூகத்தினரின் 2 வீதமானோர் மாத்திரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பெரும்பான்மை மக்களிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 36 சதவீதமானோர் மஹிந்த ராஜபக்ஷவே பிரதருக்கு தகுயானவர் எனவும் 31.9 வீதமானோர் ரணில் விக்கிரமசிங்கவே தகுயானவர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே 39.8 வீதம் ஆதரவு உள்ளது.
மாகாண அடிப்படையில் மேல், மத்திய, வடக்கு, கிழக்கு, வட மேல், ஊவா மற்றும் சப்பரகமுவ மாகாணங்களில் ரணில் விக்கிரம சிங்கவுக்கே அதிகமான ஆதரவு உள்ளது.
தெற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் மஹிந்த ராஜபக்வுக்கு கூடுதலான ஆதரவு உள்ளது.
மேலும் நாட்டில் 58.1 வீதமானோர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போவது என ஏற்கனவே தீரமானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தல் குறித்து மாற்றுக்கொள்கை நிலையம் நடத்திய ஆய்வில் தற்போதைய மைத்திரிபால சிறிசேனவுக்கு 76 வீதமும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 23.94 வீதமானோர் வெற்றி பெறவார்கள் அறிவிருத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



 
Top