GuidePedia

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் தலைசிறந்த நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன எதிர்வரும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார்.
எனினும் முழுநேர ஆலோசகராக இவர் செயற்படமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் வருடத்தின் அதிகளவான காலப்பகுதியை இதற்காக செலவிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக இனங்காணப்பட்டுள்ள மஹேல ஜயவர்த்தன பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராவார்.
குறிப்பாக ஆசிய ஆடுகளங்களில் இவரது அனுபவமானது எதிர்வரும் 18 மாதங்களுக்கு மேலாக ஆசிய ஆடுகளங்களில் போட்டிகளில் பங்குபற்றவுள்ள இங்கிலாந்து அணிக்கு மிகச்சிறப்பான முறையில் விளையாடுவதற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை



 
Top